Friday, December 24, 2010

புரட்சித்தலைவர் 23வது நினைவுநாள் அஞ்சலி 24.12.2010.




தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்


கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தடைகள் எல்லாம் உடைந்திடும் இங்கே


தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்


Wednesday, November 24, 2010

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி

நீரா ராடியா-ராசா, கனிமொழி உரையாடல்களுக்கு என்ன பதில்? - கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி
சென்னை, நவ.24,2010
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் குறித்து முதல்வர் கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்காதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
பகுத்தறிவு...
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தஞ்சை பெரிய கோயிலின் பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் பின்பக்க வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றவர், கருணாநிதி.
அப்போது பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக கோயிலுக்குள் சென்று ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடியதை கண்டு களித்த கருணாநிதி; ஜோதிடரின் சொல்லுக்கு இணங்க மஞ்சள் துண்டை அணிந்து கொள்ளும் கருணாநிதி; பெரியார் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.  
இது மட்டுமல்லாமல், கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், குடும்பத்துடன் திருக்குவளை கிராமத்திற்குச் சென்று குடும்ப குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தது; கோயில் குடமுழுக்கு விழாக்களில் தன் மனைவி, துணைவி, மகள்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்வது; வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால் தன் குடும்ப உறுப்பினர்கள் சுற்றித் திரிவது - இவற்றை எல்லாம் மறந்து, பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. 
"பணத்தால் இயங்க வேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகி விடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லாளர்களும், தன்னலங்களும் தலைமையேற்று விடுவர்" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.  பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க-வை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல், குடும்ப இயக்கமாகவே மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.
"அரசியல் இயக்கம் பொதுப்பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்றும் கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்" என்றார் பேரறிஞர் அண்ணா.  இன்று தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியைப் பெறுவதற்கும், சொத்துகளை குவிப்பதற்கும் தானே தி.மு.க. என்கிற கட்சியை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்?  கருணாநிதியிடம் பொதுப்பணி எங்கு இருக்கிறது? அவரிடம் இருப்பதெல்லாம் குடும்பப் பணி ஒன்று தான். 
"ஜனநாயகம் பின்னோக்கிச் செல்லும் நிலை கூடாது. சிறந்த ஜனநாயக சூழ்நிலை வளர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், ஜனநாயகத்தை வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இப்படிப்பட்ட கருணாநிதிக்கு, தந்தை பெரியார் கொள்கை மற்றும் பேரறிஞர் அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? திமுக-வை குடும்ப நிறுவனம் ஆக்கிவிட்டார் கருணாநிதி என்று உலகப் புகழ்பெற்ற "THE NEW YORK TIMES" அமெரிக்க நாளிதழ் கூட விமர்சனம் செய்திருக்கிறது.
அறிக்கைகள்...
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், "யாரோ எழுதுகிறார்கள் - யாரோ தட்டச்சு செய்து அதனை "பேக்ஸ்" மூலம் அனுப்புகிறார்கள்.  சில நாட்கள் அதைப் படித்து அம்மையார் கையெழுத்து போடுகிறார்.  சில நாட்களில் அவருக்கு அதற்கே நேரம் கிடைப்பதில்லை.  எனவே அதையும் தட்டச்சு செய்தே அனுப்பி விடுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார். 
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கருணாநிதி தன்னைப் போலவே அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்! எனது அறிக்கைகள் அனைத்தும் என்னால் எழுதப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, என்னுடைய கையெழுத்துடன் தான் தினமும் வெளியிடப்படுகின்றன என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  நேரடியாகவும், "பேக்ஸ்" மூலமும் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கைகளில் என்னுடைய கையெழுத்து நிச்சயம் இருக்கும்.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் வசதிக்காக மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் போது என்னுடைய கையெழுத்து அதில் இருக்காது. அதற்கு அவசியமும் இல்லை. வங்கிகள், பொதுத் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர் கணக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்படும் போது இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்திய அரசின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தன்னுடைய அமைச்சர் மூலம் சுருட்டிக் கொள்ளும் கருணாநிதிக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை அறிந்து கொள்ள நேரமில்லை போலும்! அந்த அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது!
"உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்" என்ற அடிப்படையில் செயல்படக் கூடியவர் கருணாநிதி என்று நான் தெரிவித்த கருத்திற்கு நீண்ட விளக்கம் அளித்து இருக்கிறார் கருணாநிதி.
இந்திரா...
முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி மதுரை வந்த போது அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு, அந்தத் தாக்குதலில் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தை, பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் வகையில் கொச்சைபடுத்திவிட்டு, பின்னர் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக" என்று கூறியதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதையும்; விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு அன்னை இந்திரா காந்தி விண்ணப்பித்தால் அதை பரிசீலிக்கத் தயார் என்று தி.மு.க. அறிவித்ததை யாரும் மறக்கவில்லை என்பதையும்; பெருந்தலைவர் காமராஜ், தியாகி கக்கன்ஜி, மூதறிஞர் ராஜாஜி என அனைத்துத் தலைவர்களையும் கருணாநிதி வசைபாடியதும்; ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் நிழல் கருணாநிதியின் மீது படிந்திருக்கிறது என்று ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியதும் மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதையும் கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
சிபிஐ அதிகாரி மாற்றம்...
அடுத்தபடியாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டதற்கு தான் காரணமல்ல என்றும், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இதற்கு பின்னணியில் கருணாநிதியும், அவரது குடும்பமும் இருக்கிறது. 
இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ அல்லது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக-வின் தலையீடோ நிச்சயம்  இருந்திருக்க வேண்டும்.  இல்லையென்றால், இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்காது. சூழ்நிலைச் சான்று (Circumstantial evidence) தான் இதற்கு ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மத்திய கண்காணிப்பு ஆடையர் நியமனம் குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது.  ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய தொலைதொடர்புத் துறை செயலாளர் எப்படி மத்திய கண்காணிப்பு ஆடையராக நியமனம் செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது. இதற்கும் சூழ்நிலைச் சான்று தான் ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  
நீரா ராடியா...
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முதலில் பேட்டி அளித்த கருணாநிதி, முந்தைய அமைச்சர்கள் பின்பற்றியதைத் தான் ராசா பின்பற்றினார் என்றும், அதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறினார்.  இதனை அடுத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு (Empowered Group of Ministers) மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு 2006-ஆம் ஆண்டே கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன். 
இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயிப்பதில் தி.மு.க. குறியாக இருந்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது.  இது போன்று ஆதாரங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு கருணாநிதி அறிக்கை வெளியிடுவது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்கவில்லை.
இதே போன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவரை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.  இதன் மர்மம் என்ன என்பது குறித்து கருணாநிதி இதுவரை விளக்கவில்லை. 
எது எப்படியோ, உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குட்டு வெளிப்படும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

Friday, November 19, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்,கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவிஅறிக்கை

அனைத்து சட்டவிரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி சொத்துக்களை குவித்து வைத்து
தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கிற கருணாநிதியையும் அவர் குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா எச்சரிக்கை


சென்னை, நவ. 19 -

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சொத்துக்களை குவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற கருணாநிதியையும், கருணாநிதி குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவித்து, குடும்ப ஆட்சி அழியும் நேரம் நெருங்கிவிட்டது என எச்சரிக்கிறேன் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இதுகுறித்து கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் கருணாநிதியால் வெளியிடப்பட்ட அறிக்கை “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. வளம் கொழிக்கும் இலாகா பறிபோய் விட்டதே என்ற ஆத்திரத்தில், நிதானம் இழந்து, ஒரு கோமாளித்தனமான அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருக்கிறார். விரக்தியின் விளிம்பிற்கு தான் சென்றுவிட்டதை தன்னுடைய அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் கருணாநிதி.

இழப்பு நிச்சயம் ஏற்பட்டுள்ளது
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், அனுமானத்தின் அடிப்படையிலே இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அறிக்கையிலே குறிப்பிடப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறை தானா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இழப்பின் மதிப்பு தான் அனுமானம் என்பதையும், இழப்பு அனுமானம் அல்ல என்பதையும் கருணாநிதி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் இழப்பு என்பது, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கலாம், அல்லது இரண்டு லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம். ஆனால் இழப்பே ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. இழப்பு நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது. உதாரணமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் 10,000 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். எனவே, லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது என்பது அனுமானத்தின் அடிப்படையில் அல்ல என்பதை கருணாநிதிக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கருணாநிதி பேசுவது கண்டனத்துக்குரியது
அடுத்தபடியாக, மாநில அரசின் பல்வேறு துறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் தணிக்கை அதிகாரியின் அறிக்கைகள் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. இது மட்டுமல்லாமல், எனது ஆட்சிக் காலத்தில் தணிக்கை அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளுக்காக நான் அப்போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேனா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது கருணாநிதியின் அறியாமையைத் தான் காட்டுகிறது. மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மீதான குறைபாடுகளை தணிக்கைத் துறை சுட்டிக்காட்டுவது என்பது வழக்கமான ஒன்று. அந்த குறைபாடுகள் எல்லாம் எல்லோரது ஆட்சிக் காலங்களிலும் நடைபெற்று இருக்கின்றன. இவைகள் எல்லாம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மீது கூறப்படும் பொதுவான குறைபாடு. இதற்காக எந்த முதலமைச்சரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலும் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அண்மையில் கூட, DLF நிறுவனத்திற்கு 26 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டதில் மாநில அரசுக்கு 148 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்காக கருணாநிதி என்ன ராஜினாமா செய்தாரா? திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மைனாரிட்டி தி.மு.க. அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய தணிக்கை அதிகாரி சங்கரநாராயணனை பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்பந்தித்ததை எல்லாம் மறந்துவிட்டு வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் கருணாநிதி பேசுவது கண்டிக்கத் தக்கது.

திசைதிருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை விடுகிறார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலைப் பொறுத்த வரையில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை கடுமையாக சாடியிருக்கிறது இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை. 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? Empowered Group of Ministers என்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற மத்திய சட்ட அமைச்சரின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக கடைசி தேதி ஏன் முன் தேதியிடப்பட்டது? தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு 85 உரிமங்கள் வழங்கப்பட்டது எப்படி? கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையை கடைபிடித்ததன் நோக்கம் என்ன? அந்தக் கொள்கையும் சரியாக கடைபிடிக்கப்படாததன் காரணம் என்ன? என தணிக்கை அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ராசாவின் மீது தனிப்பட்ட முறையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளே தவிர, மத்திய அரசின் மீது பொதுவாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. அதனால் தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. இவற்றை எல்லாம் சரியாக படித்து புரிந்து கொள்ளாமல், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்

அடுத்தபடியாக, “வெறும் கருத்தியலான இழப்பை பெரிதுப்படுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதும் சற்றும் முறையல்ல” என்று கருணாநிதி கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது. தமிழக அரசின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 60,000 கோடி ரூபாய். மூன்று ஆண்டு தமிழக அரசின் வருவாயை மொத்தமாக முழுங்கியது கருணாநிதிக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள குடும்பத்தின் தலைவரான கருணாநிதிக்கு, 1,76,379 கோடி ரூபாய் என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கோ திருப்பி விடப்பட்டு இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் கருணாநிதி பேசுவதைப் பார்த்தால், தமிழக மக்கள் உட்பட இந்திய மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டிய பணத்தை ‘தன்’ மக்களுக்காக கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு விட்டாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், பொதுச் சொத்துகள் அபகரிப்பு என அனைத்து சட்ட விரோதச் செயல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் சொத்துக்களை குவித்து, தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கின்ற கருணாநிதியையும், கருணாநிதி குடும்பத்தாரையும் மக்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவித்து, குடும்ப ஆட்சி அழியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

Wednesday, October 27, 2010

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா அதிரடி


பத்திரிக்கை செய்தி: 27.10.2010

வரும் 1ம்தேதியிலிருந்து கட்சி தொடர்பான அனைத்து செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் எனக்கு தெரிவிக்கவேண்டும்,''எனமாவட்டச்செயலர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. அக்கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது 

அதிமுக தொண்டன் விருப்பம்

இன்று நடக்கும் ஒரு குடும்ப ஆட்சியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று துணிந்து சொன்ன புரட்சி தலைவனின் தொண்டர்கள் இன்றும் என்றும் உங்களுடனே. தைரியமாக சாட்டயை சுழற்றுங்கள். பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர் போகட்டுமே நினைத்ததை முடியுங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவு காட்டுங்கள் 

 ஒரு பெண் தனியாக இருந்துகொண்டு, அதுவும் நம்பகத்தன்மை உள்ளவர்கள் தன்னிடம் இல்லாதபோது, ஒரு கட்சியை நடத்துவது என்பது எவ்வளவு கடினம் என்பது நன்றாகவே புரிகிறது எங்களுக்கு.... .உங்கள் பார்வையில் கட்சி நடந்தால் ஆட்சியை பிடிப்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை..... சிறந்த கட்சி நிர்வாகம். அதிரடி உத்தரவு. அருமை. இதைதான் எதிர்பார்க்கிறோம்.அதிமுகவில்உள்ளகளைகளைஉடனேஎடுங்கள்"களைகள்" எல்லாம் சேர வேண்டியஇடத்தில்போய்சேரட்டும்.அம்மாஇதைதான்விசுவாச தொண்டர்கள் எதிர்பர்த்துகொண்டிருந்தனர்எம்.ஜி.ஆர்ஆட்சிஅமைந்துவிட்டது என்றமகிழ்ச்சிஉண்டாகிவிட்டது.நன்றி!!

Thursday, October 21, 2010

ஆயிரம் அ.தி.மு.க., வந்தாலும் கருணாநிதி

 

ஒரு அ.தி.மு.க., அல்ல; ஆயிரம் அ.தி.மு.க., வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது. இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும்,  நமது வெற்றிக்கு தடை போட அ.தி.மு.க., பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதற்கு இடம் தரக் கூடாது. என மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடனான கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார்.

இந்த கிறுக்குத்தனமான பேச்சை கேட்டு.எம்ஜிஆர் என்கிற மக்கள் சக்தியின் பலம் புரியாமல் இவர் உளறுவதை பார்த்தால் மதுரையில் கூடிய அ.தி.மு.க,பொதுக்கூட்டத்தின் "தாக்கம்" அவரை படாத பாடு படுத்திவிட்டது என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. 1973 ல் "திண்டுக்கல்லில்" அதிமுக பிறந்த குழந்தையாய் "உதைத்த" உதையால் கருணாநிதி, கடந்த "பதினான்கு" ஆண்டுகளாய் மக்களிடம் கெஞ்சோ கெஞ்சு என்று "கெஞ்சியது"  "அழுதது"  "புலம்பியது"  "காலிலே விழுகின்றேன்" என்றது, "செருப்பாய் இருப்பேன்"என்றது,  மக்களுக்கு "துடுப்பாய்" இருப்பேன்.என்றதும், 

.எம்ஜிஆர், வரும்வரை "என்னிடம்" ஆட்சி பொறுப்பை கொடுங்கள் மக்களே.என்றதும் எம்ஜிஆர் வந்ததும் அதனை "திருப்பி" கொடுத்துவிடுகின்றேன் என்று மு.க சொன்னதும் அவ்வாறு நடக்காமல் போனதும் இறுதியில் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்கிற கதையாய் "மக்களா"இவர்கள் "சோற்றால்அடித்தபிண்டங்கள் என்று மக்கள் மீது "வசவு கணை வீசிய"  கதையெல்லாம் ஒரே ஒரு "அதிமுக" வை தாக்கு பிடிக்காமல் இவர் (மு.க) புலம்பியவை. ஒரே ஒரு அதிமுக,விற்கே தாக்கு பிடிக்க முடியாமல் "பதினான்கு" ஆண்டுகள் "வனவாசம்".என்று தூங்கியது அதன் பிறகு   2006 ல் கருணாநிதி மைனாரிடியாய் காங்.தயவுடன் பதவிக்கு வந்ததே பெரும்பாடாய் போனது.

ஆனால் இப்போது வருகின்ற "வாய்ச்சவடாலை" பாருங்கள்!! ஒரு அதிமுகவிற்கே பதில் சொல்ல முடியாமல் கருணாநிதி   உளறுவதை பார்த்தால் "வயதான" காலத்தில் "இதெல்லாம் சகஜமப்பா" என்றுதான் தோன்றுகின்றது. பாவம் கடைசி பதவி..அந்த ஏக்கம் வெறுப்பு கோபம் அதன் எதிரொலிதான் இந்த "வீர"வசனம்.!

பொதுமக்கள் மட்டும் தங்களது மனசாட்சிப்படி ஓட்டு போட்டால் போதும்., ஒரே ஒரு அ தி மு க கூட தேவையில்லை  தி மு க அரசை தோற்கடிக்க,  பொதுமக்களேபோதும். முடிவை நான் இங்கே தெரிவிக்க வேண்டியது இல்லை..

ஓர் அ தி மு க வை வெல்வதற்கே இவருக்கு ஏழு கட்சி கூட்டணி தேவை பட்டது.ஆயிரம் அ .தி.மு.க,வை வெல்வதற்கு இவருக்கு ஏழாயிரம் கட்சி கூட்டணி தேவை. அவ்வளவு கட்சிகள் தமிழ் நாட்டில் இல்லையே.ஒரு அதிமுகவையே உங்களால் சமாளிக்க ,    பதில் சொல்ல, முடியலை.  

 இந்தநிலையில் எப்படி ஆயிரம் அதிமுகவை சமாளிக்கமுடியும்?. ஒருவனுக்கு எழுந்திரிச்சி நிக்கவே வழி இல்லையாம்.அவனுக்கு ஆயிரம் பொண்டாட்டி கேட்குதாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது

Sunday, October 17, 2010

அ.தி.மு.க. ஆண்டுவிழா.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா,அறிக்கை

சென்னை, அக்.16: அ.தி.மு.க. 39-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆண்டுவிழாவையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நன்னாளில், கழகம் கடந்து வந்த வெற்றிப் பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர்சாய்த்த பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சரித்திரத்தின் சக்கரங்களை பின் நோக்கி உருட்டிப் பார்த்தால், கணக்குப் போட்டு பிறக்கின்ற கட்சிகளுக்கு மத்தியில், கணக்கு கேட்டு பிறந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தன் முதல் வெற்றியை பெற்றது. எக்கு கோட்டையாய் கழகத்தைக் கட்டிக் காத்து வந்த நம் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தின் கொள்கை-கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வரவைத்தார்.
இவ்வேளையில், 1984-ல் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பொதுத் தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக்காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை நான் பெற்றேன்.
எம்.ஜி.ஆர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கைïட்டும் பிரசாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, அ.தி.மு.க. அமோக வெற்றியை ஈட்டியது.
பின்னர், 1987-ம் ஆண்டு கழகத்தில் பிளவை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி 1989-ல் ஆட்சிக்கு வந்தார்.
இருப்பினும், உங்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், 1989-ல் பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்றுபடுத்தி, இழந்த ``இரட்டை இலை'' சின்னத்தை மீட்டு, பூட்டப்பட்ட கட்சி அலுவலகத்தையும் திறந்து, புதிய மறுமலர்ச்சியை கழகத்திற்கு ஊட்டியதன் விளைவாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வை தோற்கடித்து மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு நான் அழைத்து வந்ததை, நீங்கள் அறிவீர்கள்.
அதனைத் தொடர்ந்து 1991 சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 1991-ல் எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அ.தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை வழங்கியது.
1996-ல் நம் கழகம் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது. ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்து போகாது, தொண்டர்களை தட்டிக் கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப் பாதைக்குள் கொண்டு வந்து, 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றிகளை நான் குவிக்கச் செய்தேன். மேலும், மத்திய ஆட்சியிலும், அதிகாரத்திலும் நம் பேரியக்கத்தை பங்குபெற வைத்து வரலாற்றுப் புரட்சியையும் அ.தி.மு.க. படைத்தது.
அதனைத் தொடர்ந்து 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், எனது தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்தது. அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியது. இருப்பினும் 2006-ல், பல கட்சிகளின் துணையோடு ஒரு அரசாங்கத்தை அமைத்தார் கருணாநிதி.

தமிழகத்துக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அ.தி.மு.க. தான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி என்னால் அழைத்துச் செல்ல முடிகிறது என்றால், அதற்கான ஊக்க சக்தியாக இருப்பது தொண்டர்களாகிய உங்களின் அன்பும், ஒத்துழைப்பும், என் மீது எந்நாளும் நீங்கள் கொண்டிருக்கும் மாசற்ற பற்றும் தான்.

அ.தி.மு.க.வின் 39-வது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆங்காங்கே கழகக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக் கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஆற்றல் மிகு அடலேறுகளே! ஆயத்தமாவோம், அதோ! களம் காத்திருக்கிறது! தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்; ஒரு பொன்னான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது. அ.தி.மு.க., தனது முதல் கன்னி வெற்றியை 1973-ல் எந்த மே மாதத்தில் குவித்ததோ, அதே மே மாதத்தில், 2011-ல் அமையப் போகும் புதிய அரசிற்கான சட்டமன்றத் தேர்தலிலும், எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, September 26, 2010

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்


நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.