Sunday, February 27, 2011

ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா?: ஜெயலலிதா கேள்வி


சென்னை, பிப்.27: யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு; முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தியும், மகள் கனிமொழியும் இப்பொழுதாவது உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் புரட்சிதலைவி ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.  இந்த உரையாடலின் போது, ராசாத்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரும், ராசாத்தியின் தணிக்கையாளருமான ரத்னம் மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் ராசாத்திக்கு உதவி புரிந்தார்.  இந்த உரையாடலின் சாராம்சம் என்னவென்றால், டாடா குழுமம் உறுதி அளித்த நில விவகாரம் முடிவடையாததால் ராசாத்தி வருத்தமடைந்த நிலையில் இருந்தார் என்பது தான்.  இந்த உரையாடலில், சென்னையின் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய இடத்தை பயன்படுத்தி கொண்டிருக்கின்ற டாடா குழுமத்தின் நிறுவனமான வோல்டாஸ் பெயர் குறிப்பிடப்படுகிறது.

பின்னர், இந்த நிலம் தொடர்பாக ராசாத்தியின் கூட்டாளியான சரவணன் என்பவருக்கும் சண்முகநாதன் என்பவருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த ஆவணத்தின்படி, ரூ. 350 கோடி மதிப்புடைய சென்னையின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் செயலுரிமை ஆவணத்தைப் பெற்ற சரவணன், சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான சண்முகநாதன் என்பவருக்கு மிகக் குறைந்த விலைக்கு ரூ. 25 கோடிக்கு விற்று இருக்கிறார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வோல்டாஸ் நிறுவனம் இயங்கி வந்ததை வைத்து, இந்த இடத்தைப் பற்றித் தான் ராசாத்தியும், ரத்தினமும், நீரா ராடியாவிடம் பேசினார்கள் என்பது தெரிகிறது.

இந்த ஆவணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்தவுடன், தனக்கும், அந்த இடத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற அளவில் ராசாத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். சரவணன் தன்னுடைய ராயல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் “முன்னாள் பணியாளர்” என்றும் ராசாத்தி தெரிவித்தார். சரவணன் தற்போது தனது நிறுவனத்தின் பணியாளர் இல்லை என்றும், தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பதற்காக, தன்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் கூறினார்.  சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் சண்முகநாதனைப் பொறுத்தவரையில், அவர் மலேசியாவை சேர்ந்த ஒரு வியாபாரி என்றும், அவருக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ராசாத்தி தெரிவித்தார்.
அண்மையில் கோத்தகிரியின் விண்ட்ஸர் எஸ்டேட்டை சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குநர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 
இந்த எஸ்டேட் “கனிமொழி எஸ்டேட்” என்று உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது. 

525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம்

16.12.2006 அன்று வெறும் ரூ. 2.47 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.  ராசாத்தியின் கூற்றுப்படி, இந்த எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும், ராசாத்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை, தி.நகர், 12, சௌத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் கே. சேஷாத்ரியின் மகன் எஸ். சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.  அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் ராசாத்தி பேசும் போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர் ரத்தினத்திற்கும், எஸ். சீனிவாச ரத்தினற்கும் ஒதே முகவரி தான்! அவரே தான் இவர்!

சண்முகநாதனின் வோல்டாஸ் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் முன்னாள் பணியாளர் சரவணன்.  சண்முகநாதனின் விண்ட்ஸர் எஸ்டேட் நில விற்பனையில் தொடர்புடையவர் ராசாத்தியின் தற்போதைய ஆடிட்டர் ரத்னம்.  விண்ட்ஸர்  எஸ்டேட்டை உள்ளூர் மக்கள் “கனிமொழி எஸ்டேட்” என்று தான் அழைக்கிறார்கள்.... 
யதேச்சையாக ஏற்படும் ஒத்த நிகழ்வுகளுக்கும் ஓர் எல்லை உண்டு, அல்லவா? 

இப்பொழுதாவது, ராசாத்தியும், கனிமொழியும் உண்மையை வெளிப்படுத்துவார்களா? என அதிமுக பொதுச்செயலர் புரட்சிதலைவி ஜெயலலிதா தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Saturday, February 19, 2011

கலைஞர் டிவி. கனிமொழியின் பங்கு.அதிர்ச்சியான தகவல்கள்.

கலைஞர் டிவி'யில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது குறித்து?
 கனிமொழி அளித்த பதில்  :  அதுபற்றி தெரியாது

அம்மா கனிமொழி, ஒலகத்துக்கே உங்க TV ஆபீஸ் ல ரெய்டு நடத்துனது தெரியும், உங்களுக்கு மட்டும் தெரியாதா? அது சரி, நீங்க கலைஞர் TV யோட Promotor - என்பதாவது தெரியுமா? 80% ஷேர், நீங்க கலைஞர் TV நிறுவனத்துல வச்சிருக்கீங்களே, அதனோட மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி என்பதாவது தெரியுமா ராசாத்தி அம்மையாருக்கும், உங்களுக்கும் அத்தனை ஆயிரம் கோடி எங்க இருந்து வந்துச்சு? பிறவியிலேயே கோடீஸ்வரின்னு சொல்லப்போறீங்களா? மஞ்ச துண்டு நல்லா உஷாராதான்யா பண்ணி இருக்காரு.

 இந்த ரெய்டு எல்லாம் நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு என்கிற செட் அப்தான். வருகிற ரெய்டு திடீர் என்று வருவது தானே? கலைஞர் டிவி அறிவிப்பு கொடுத்து சிக்னல் தந்த பிறகு வருவது யாரை ஏமாற்ற நடத்தும் நாடகம்?.
 
நக்கீரன் செய்தி
  கலைஞர் டிவியில் 20 % ஷேர் வாங்க கனிமொழி கொடுத்த விலை 2 கோடி ரூபாய்

அதே கலைஞர் டிவியில் 30 % ஷேர் வாங்க சினியுக் நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ்

தொகையே 214  கோடி ரூபாய் அப்படியும் விலை படியவில்லை என்றுதொகை கடனாகக் கருதி

வட்டியுடன் 214+31= 245கோடியாக திருப்பிக்
கொடுக்கப்பட்டு விட்டதாம்.

 


கருணாநிதி ஒன்னும் தொலைக்காட்சி வரலாற்றில் கொடி கெட்டி பரந்த "வியாபாரக் காந்தம்" கிடையாது. 200+ கோடியை, 31 வட்டி உடன் திருப்பி குடுக்க, எவ்வளவு பெரிய தொலை காட்சி நிறுவனமாக இருந்தாலும் கூட மிக கடினம். CBI க்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அந்த பணம் சமந்தப்பட்ட முழு விவரம் வாங்கியாக வேண்டும்.  கருணாநிதி கடனை திருப்பி குடுத்த முறையை, நீங்கள் ஆழமாக ஆராயவேண்டும். சன் டிவி.யை அண்ணா அறிவாலயத்தை விட்டு துரத்தியது, அதன் பின்னர் அவசர அவசரமாக சொந்த சேனல்களை குவித்தது, ஊர் அறிந்ததே, CBI இதையும் ஆராயவேண்டும். ஹலோ CBI ஆபீசர்ஸ்.. அலர்ட்டு ஆறுமுகமா இருங்க ..

Friday, February 11, 2011

கருணாநிதி..ஸ்பெக்ட்ரம்..ஊழல்.. ராசாத்தி என்ற தர்மா..கனிமொழி .

"2ஜி  இமாலய ஊழலில் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே," என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் மட்டும் பாராட்டுப் பெற தகுதியுடையவர் ஆகிறார். விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என்று வருகிற போது, 1969-ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை, அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார் கருணாநிதி.
 
ஒரு சிறிய உதாரணத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராசாத்தி என்று தற்போது அழைக்கப்படும் கருணாநிதியின் மனைவி, திருமதி தர்மா வாங்கிய வீடு தொடர்பான ஏழாவது குற்றச்சாட்டு குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53-லிருந்து ஒரு சில பகுதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

கதவு எண். 9, முதல் குறுக்குத் தெரு, ராசா அண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை திருமதி இ.எல்.விஸ்வாசம் என்பவரிடமிருந்து 20.1.1969 அன்று ரூ.57,000 விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் தர்மா. இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம்  தன்னுடைய பாதுகாவலர் டி.கே.கபாலிக்கு விற்றுவிட்டார் தர்மா.  இந்த வீட்டை வாங்கிய டி.கே. கபாலி, விற்பனையாளரான ராசாத்தி என்கிற தர்மாவுக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார். அதே நாளன்று, டி.கே. கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து இருக்கிறார் தர்மா.

இதன்படி, மாதாந்திர வாடகை ரூ.300 என்கிற அடிப்படையில் அதே வீடு தர்மாவிற்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதாவது, தான் விற்ற வீட்டிலேயே தர்மா தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ.45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ.12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். தர்மாவின் தாயார் தான் இந்த சிவபாக்யம். இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.  20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் தர்மா மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ.40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும்  தர்மா குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி, ரூ.57,000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது. கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது.

இந்த ஆவணத்தின்படி, கடன் வாங்கப்பட்ட பணம், ரூ. 15,000/-, ரூ. 15,000/- மற்றும் ரூ. 10,000/- என்று மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில், மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான வாக்குறுதி பத்திரம் தயாரிக்கப்பட்டு அதில் 21.8.1970 அன்று தர்மா கையெழுத்து இட்டு இருக்கிறார். பின்னர், அந்த வாக்குறுதி சீட்டில் தர்மாவிடமிருந்து ரூ 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி. இந்த வாக்குறுதி சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில், தர்மாவிற்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி. அதாவது, ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயாரிடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்.

நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத் தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளிவிவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலைமை நீதிபதிக்கு ஏற்பட்டது. எனவே, "விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்" என்று கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞான பூர்வமான ஊழல்கள் தான் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத் துறையைச் சேர்ந்த டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்துக்கு, அரிதான 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையான ரூ.1,537 கோடிக்கு முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா அளித்தார். இதற்குப் பிறகு, டைனமிக்ஸ் பால்வா என்ற நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை U.A.E நாட்டைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு ரூ 4,200 கோடிக்கு விற்றது.

இந்த அளவுக்கு லாபம் பெற உதவி புரிந்ததற்காக, ராசாவின் எஜமானரும், குருவுமான கருணாநிதிக்கு டைனமிக்ஸ் பால்வா அதிபர் லஞ்சம் கொடுத்தார். ஆனால், இந்தப் பணம் நேரடியாக கொடுக்கப்படவில்லை. வருமான வரித் துறையினரின் கண்களிலிருந்து தப்புவதற்காக, தன்னுடைய கட்டுப்பாட்டில் வரும் 11 நிறுவனங்களிலிருந்து ரூ 25 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை, ஆக மொத்தம் ரூ 209.25 கோடியை ஆசிப் பால்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான குசேகான் ஃப்ரூட்ஸ் மற்றும் வெஜிடெபிள்ஸ் என்ற நிறுவனத்திற்கு பால்வா மாற்றியிருக்கிறார். 

குசேகான் நிறுவனம் இதிலிருந்து ரூ.206.25 கோடியை பால்வாஸ் மற்றும் மொரானிக்கு சொந்தமான சினியுக் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறது. இந்த சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-2010-ம் ஆண்டைய இருப்பு நிலைக் குறிப்பை பார்க்கும் போது, கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியும் சேர்ந்த 80 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த கலைஞர் டி.வி.க்கு உத்திரவாதமற்ற கடனாக ரூ.206 கோடி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சர்க்காரியா ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிமாற்றமும், கலைஞர் டி.வி. பணப் பரிவர்த்தனையும் ஒத்திருப்பது தான் இதில் விசேஷமான ஒன்று. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு நேர்மையற்ற முறை. அதே மூளை தானே இந்த சதித் திட்டத்தையும் தீட்டி இருக்கிறது!
கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்களே. இதைச் செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். அப்பொழுது தான் நீதி நிலைநாட்டப்படும்," என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Friday, February 4, 2011

கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?புரட்சித்தலைவிபேட்டி.


ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி   கூறியதாவது:
 

ராசா மீதான கைது நடவடிக்கை பல புதிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. கருணாநிதி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த நடவடிக்கை மிகவும் தாமதமான, மிகவும் சாதாரணமான ஒரு நடவடிக்கை.
 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நீராராடியா, கருணாநிதி குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் வெளியாயின. ஊழலில் ஆதாயமடைந்த கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகஇருக்கிறோம். மத்திய அரசின் நடவடிக்கைகளில் பெருமளவில் முரண்பாடுகள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ரூ. 1,76,000 கோடி இழப்பு என சி.ஏ.ஜி. கூறியுள்ளார்.
 

அமைச்சர் கபில்சிபல், அரசுக்கு இழப்பே ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது ராசாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கபில்சிபல் தெரிவித்தது போல், ராசா தவறு செய்யவில்லை என்றால் அவர் கைது செய்யப்பட்டது ஏன்?
 

ராசாத்தி, கனிமொழி ஆகியோருடன் நீராராடியாவின் தொலைபேசி உரையாடல் கருணாநிதி குடும்பத்தினரின் தொடர்புகளை தெளிவாக்குகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கருணாநிதி குடும்பத்தினரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ராசா கைது நடவடிக்கையுடன் இப்பிரச்சினை முடிந்துவிடவில்லை. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். தற்போதைய சூழ்நிலையில், ராசா கைது செய்யப்பட்டிருப்பது செயற்கையாகவும், சந்தேகத்திற்கு இடம் அளிப்பதாகவும் உள்ளது. 3 ஆண்டுகளாக ராசாவை ஏன் கைது செய்யவில்லை? ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானதும், 3 ஆண்டுகளுக்கு முன்பே அல்லது 2 ஆண்டுகளுக்கு முன்பே ராசாவை ஏன் கைது செய்யவில்லை? உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகாவது கைது செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை,


தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு செயற்கையாக நடத்தப்பட்டுள்ள அரசியல் நாடகம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் ஆதாயம் அடைந்த கருணாநிதி குடும்பத்தினரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Tuesday, February 1, 2011

நெற்றிக்கண் திறப்பினும் ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரமே!



குற்றவாளிகள் பிறப்பது கிடையாது. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்னும் சப்பைக்கட்டோடு, ஆட்டோ சங்கர் என்னும் அயோக்கியனுக்கு அன்று வக்காலத்து வாங்கியவர்கள் - காட்டுக்கொள்ளையன் வீரப்பனையே விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு சமமாக சித்தரித்தவர்கள் - மேலும் அவன் கடத்திச் செல்லும் பிரமுகர்களை காப்பாற்றுவதாய் தூது நாடகம் ஆடி, கோடிகளால் கல்லா கட்டியவர்கள், புலனாய்வுப் புலிகளென்று சொல்லிக்கொண்டு ஊர்-உலகத்தையே ஏமாற்றுவது, மிரட்டி பணம் பறிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, கருணாநிதி அரசுக்கு தரகு வேலை பார்ப்பது என கயமைகளின் உச்சம் தொட்ட அவர்கள் விரைவில் சமூகத்தின் முன் தலைகுனிந்தும், சட்டத்தின் முன் கைவிலங்கோடும் நிற்கும் காலம் விரைவில் வருகிறது என்பதை 28.11.2010 டாக்டர் நமது எம்.ஜி.ஆர். இதழில் “தமிழ்நாட்டிலும் ஓர் ஆண் நீராராடியா” என்னும் தலைப்பிலும், 14.12.2010 அன்று “பெயரையாவது மாத்துங்க... ப்ளீஸ்...!” என்ற தலைப்பிலும் நமது உளவுத் துறை உலகுக்கு அறிவித்தது.

அன்று நாம் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. ஆம். தமிழகத்தில் வாரம் இருமுறை இதழாக வெளிவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையின் இணையாசிரியர் காமராஜின் திரைமறைவு அட்டூழியங்களையும் - திகில் நடவடிக்கைகளையும் - ஸ்பெக்ட்ரம் திருடன் ராசாவுக்கு அவர் வால்பிடித்த கதையையும் - அந்த ராசா கொள்ளையடித்த அலைவரிசை பணத்தை உலகெங்கும் கொண்டு சென்று பதுக்குவதற்கு ஆள் பிடித்த கதைகளையும் அம்பலமாக்கி இருந்தோம். நாம் சொன்ன அனைத்தும் உண்மை என்பது நேற்று (15.12.2010) அதிகாலை நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) பெசன்ட் நகரிலுள்ள காமராஜின் பங்களாவில் புகுந்து அதிரடி சோதனையை மேற்கொண்டது உறுதிப்படுத்தியது. அப்போது திகிலூட்டும் திரைமறைவு விஷயங்கள் ஆவணங்களாகவும், கோப்புகளாகவும் சி.பி.ஐ.யால் அள்ளிச் செல்லப்-பட்டனவாம்.

ஒரு குழந்தைக்கு அனைத்துப் பயிற்சிகளும் கொடுத்து, வளர்த்து ஆளாக்கி, பின்னாளில் பெரும் கொள்ளைக்காரனாய் அவனை உருவாக்கும் சினிமா கதைபோலவே, காமராஜும் ஆ.ராசாவை தி.மு.க.வில் சேர்த்தது தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலில் சீட்டு வாங்கியது வரையிலும், அவரை அமைச்சராக்கியது, கொள்கைபரப்புச் செயலாளராக்கியது, அதிலும் குறிப்பாக மத்திய அரசில் தகவல் தொழில்நுட்பத் துறையை லாவகமாய் ராசா பெறுவதற்காக கருணாநிதியின் மகள் கனிமொழியை வளைப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் ராசாவுக்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தது வரை அனைத்து சூழ்ச்சிகளையும் கற்றுக்கொடுத்த துரோனாச்சாரியாகவே நக்கீரன் காமராஜ் செயல்பட்டு வந்திருக்கிறார் என்பதும் சி.பி.ஐ.யின் புலனாய்வு அதிகாரிகளுக்கு தெளிவாகியதாம். மேலும், தன்னை அரசியலில் உருவாக்கி, கோடிகளில் புரள வைத்ததற்கு நன்றிக் கடனாகவே ஸ்பெக்ட்ரம் திருடன் ராசா தனது கிரீன்ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்திலும், மாடர்ன் ஹைடெக் நிறுவனத்திலும் நக்கீரன் காமராஜையும் இயக்குநராக அமர வைத்து அழகுபார்த்திருக்கிறார்.
இவற்றோடு, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் சில நூறு ஏக்கர் விலைமதிப்பில்லா நிலங்களும், பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் காமராஜ் பெயரிலும், அவரது தந்தை அண்ணாமலை பெயரிலும் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பதும், இவற்றோடு வடமாநிலங்களில் இரண்டு பொறியியல் கல்லூரியும், ஒரு மருத்துவக் கல்லூரியும் காமராஜின் பெயரிலேயே வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.

மேலும், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பணத்தை உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று, அவற்றை பத்திரமாக பதுக்கும் வேலையையும் நக்கீரன் காமராஜ் முன்னின்று செய்திருக்கிறாராம். இவர்தான் ஈ.டி.ஏ. குழுமங்களின் தலைவர் சலாவுதீனையும், பெரம்பலூர் சாதிக்பாட்சாவையும் ராசாவுக்கு அறிமுகப்படுத்தியதோடு, அந்த சலாவுதீனின் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கருணாநிதியின் “கலைஞர் காப்பீட்டுத் திட்டத்”துடனான ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாராம். இதற்கு மட்டும் இவர் பெற்ற கமிஷன் தொகை சுமார் 25 கோடி ரூபாயாம். மேலும், தமிழகக் காவல்துறையின் உளவு அதிகாரிகளை இயக்கும் சக்தியாகவும் இவர் செயல்பட்டு வந்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் மட்டுமே படித்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு மட்டும் ஐநூறு கோடிகளையும் தாண்டுமாம். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து முதலமைச்சரிடம் வத்தி வைப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது என சகல பராக்கிரமங்களையும் கடந்த ஐந்து வருடங்களாக நடத்திவந்தாராம். மேலும், வீட்டுவசதி வாரிய இடங்களை தன் மனைவி ஜெயசுதா பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவித்திருக்கிறார்.

இப்படி, பத்திரிகை முகமூடி போட்டுக்கொண்டு, பல்வேறு தில்லாலங்கடி வேலைகளையும் மிகத் திறமையாக செய்துவந்த காமராஜ், நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரான கோபாலையே தனது கொத்தடிமையாகவே வைத்திருந்தாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டால், “நக்கீரன் என்று எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கே அவருக்கு நான்கு நிமிடம் ஆகுமே... அவருக்கு என்ன தெரியும், இந்த காமராஜ் இல்லையென்றால் நக்கீரனும் இருக்காது, நக்கீரன் கோபாலும் இருக்க முடியாது! அடிப்பதில்தான் அவருக்கு போதிய பங்கு போய்விடுகிறதே” என்றும் இறுமாப்போடே காமராஜ் பதிலளிப்பாராம். இப்படி, ஒரு பத்திரிகையின் இணையாசிரியர் இருக்கையில் இருந்துகொண்டு, உத்தமர் வேடமி
பத்திரிகை முகமூடி போட்டுக்கொண்டு, பல்வேறு தில்லாலங்கடி வேலைகளையும் மிகத் திறமையாக செய்துவந்த காமராஜ், இப்படி, ஒரு பத்திரிகையின் இணையாசிரியர் இருக்கையில் இருந்துகொண்டு, உத்தமர் வேடமிட்டு ஊர் - உலகத்தை மிரட்டி, காசு பார்த்து வந்த காமராஜ், இப்போது உலகப் பெரும் ஊழல் பேர்வழிக்கு ஊன்றுகோலாக நின்று, உதவி வந்த அசிங்க அத்தியாயங்கள் அரங்கேறத் தொடங்கியதும், தன்னைக் காப்பாற்றுமாறு   மன்றாடினாராம். கருணாவோ, அடிக்கிற காற்றில் அம்மியே பறக்கிறபோது, பஞ்சை எப்படி பத்திரப் படுத்துவது என்று கைவிட்டுவிடவே, “சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்து பல வகையினில் கொள்ளை அடிக்கிறார்...” என்னும் வரிகள் சுத்தமாய்ப் பொருந்துகின்ற நக்கீரன் காமராஜின் நீண்ட நெடிய நாடகம்  சி.பி.ஐ.யின் அதிரடி நடவடிக்கையால் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குற்றவாளிகள் பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள் என்று சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் நக்கீரனிடம் நாட்டு மக்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான். ஆண்டிமுத்து ராசா என்னும் குற்றவாளி பிறந்தாரா? இல்லை அந்த ஆண்டிமுத்து ராசாவை அலைவரிசை ராசாவாக உருவாக்கிய அயோக்கிய காரியத்தை ‘நக்கீரனி’ன் இணையாசிரியர் காமராஜும் முன்னின்று செய்து முடித்தாரா? என்பதுதான். எதிர் நிற்பது இறைவனே என்றாலும், குற்றம் குற்றமே என்று சொன்ன ‘நக்கீரன்’ பெயர் கொண்ட அந்த பத்திரிக்கை, நாட்டையே திகிலடைய வைத்திருக்கும் தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது இணையாசிரியரும் பங்கெடுத்ததற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் தன் பெயரை அப்பத்திரிகை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தலைப்பில் முழங்குகிற அந்த முழக்கத்தையாவது மாற்றி, இனி “நெற்றிக்கண் திறப்பினும் ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்” என்றாவது அச்சிடவேண்டும். அதுவும் முடியாது போனால், “பொன் நாடார் பொருள் நாடார் தன் அன்னையையும் நாடார், நாடொன்றே நாடி, தன் நலமென்றும் நாடாத நாடாரை நாடினேன்” என்று கவியரசு கண்ணதாசனால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தான் வைத்துக்கொள்வது தகுமா என்று வெட்கித் தலைகுனிந்து இணையாசிரியர் காமராஜாவது குறைந்தபட்சம் வேறொரு பெயருக்கு தன்னை மாற்றிக்கொண்டாலாவது மறைந்த அந்த மாபெரும் தலைவரின் ஆன்மாவாவது மட்டற்ற மகிழ்ச்சி அடையும்.
புலனாய்வுப் புலிகள் செய்வார்களா... பார்ப்போம் என்னும் மக்களின் காத்திருப்போடு நாமும்.
ட்டு ஊர் - உலகத்தை மிரட்டி, காசு பார்த்து வந்த காமராஜ், இப்போது உலகப் பெரும் ஊழல் பேர்வழிக்கு ஊன்றுகோலாக நின்று, உதவி வந்த அசிங்க அத்தியாயங்கள் அரங்கேறத் தொடங்கியதும், தன்னைக் காப்பாற்றுமாறு மறைமுகமாக வேண்டும் நோக்கத்தோடே, கடந்த நக்கீரன் இதழில் கருணாநிதியின் புலம்பல் பேட்டி ஒன்றையும் அச்சிலேற்றி மன்றாடினாராம். கருணாவோ, அடிக்கிற காற்றில் அம்மியே பறக்கிறபோது, பஞ்சை எப்படி பத்திரப் படுத்துவது என்று கைவிட்டுவிடவே, புலனாய்வுத் துறை வரும் வழிபார்த்து வாசலை எதிர்நோக்கியே காத்திருந்தாராம். “சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்து பல வகையினில் கொள்ளை அடிக்கிறார்...” என்னும் வரிகள் சுத்தமாய்ப் பொருந்துகின்ற நக்கீரன் காமராஜின் நீண்ட நெடிய நாடகம் ஒருவழியாய் சி.பி.ஐ.யின் அதிரடி நடவடிக்கையால் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குற்றவாளிகள் பிறப்பது கிடையாது. உருவாக்கப்படுகிறார்கள் என்று சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்கும் நக்கீரனிடம் நாட்டு மக்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான். ஆண்டிமுத்து ராசா என்னும் குற்றவாளி பிறந்தாரா? இல்லை அந்த ஆண்டிமுத்து ராசாவை அலைவரிசை ராசாவாக உருவாக்கிய அயோக்கிய காரியத்தை ‘நக்கீரனி’ன் இணையாசிரியர் காமராஜும் முன்னின்று செய்து முடித்தாரா? என்பதுதான். எதிர் நிற்பது இறைவனே என்றாலும், குற்றம் குற்றமே என்று சொன்ன ‘நக்கீரன்’ பெயர் கொண்ட அந்த பத்திரிக்கை, நாட்டையே திகிலடைய வைத்திருக்கும் தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது இணையாசிரியரும் பங்கெடுத்ததற்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் தன் பெயரை அப்பத்திரிகை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தலைப்பில் முழங்குகிற அந்த முழக்கத்தையாவது மாற்றி, இனி “நெற்றிக்கண் திறப்பினும் ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்” என்றாவது அச்சிடவேண்டும். அதுவும் முடியாது போனால், “பொன் நாடார் பொருள் நாடார் தன் அன்னையையும் நாடார், நாடொன்றே நாடி, தன் நலமென்றும் நாடாத நாடாரை நாடினேன்” என்று கவியரசு கண்ணதாசனால் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தான் வைத்துக்கொள்வது தகுமா என்று வெட்கித் தலைகுனிந்து இணையாசிரியர் காமராஜாவது குறைந்தபட்சம் வேறொரு பெயருக்கு தன்னை மாற்றிக்கொண்டாலாவது மறைந்த அந்த மாபெரும் தலைவரின் ஆன்மாவாவது மட்டற்ற மகிழ்ச்சி அடையும்.
புலனாய்வுப் புலிகள் செய்வார்களா... பார்ப்போம் என்னும் மக்களின் காத்திருப்போடு நாமும்.