Thursday, March 24, 2011

2011-ம் ஆண்டு தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அதிமுக - தேர்தல் அறிக்கை.24.03.2011.

தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகத்தின் லட்சியம். 

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம்.  ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, "நாடென்ன செய்தது நமக்கு?" என்ற நிலை மாறி, "நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று சொல்லும் நிலைக்கு மக்களையும், இளைஞர்களையும் தயார்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும். 
 தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு அதிமுக அரசின் சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:-


வேளாண் திட்டங்கள்...

* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும்.  .

* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 30,000 ஹெக்டேர் நிலப்பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
* கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாய கருவிகளை அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாய கருவிகளை இலவசமாக வழங்குவோம்.
* தரமான விதைகள், விவசாய இடுபொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தாமதமின்றி இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.  விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப்படுத்துவோம்.

ரூ.1 அரிசி இலவசமாக..
குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
* நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப் பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
* ஆண்டுக்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல்
40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும். உற்பத்தித் தள்ளுபடியாக 300 கிலோ பருப்புக்கு உற்பத்தி செலவு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்கப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.


சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்...
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.
* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.


அனைவருக்கும் தரமான மருத்துவம்...
* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.
* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

நவீன பசுமை வீடு...
* கருணாநிதியின் வீட்டு வசதித் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் இருப்பதாலும் மற்றும் மக்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்றக் கூடிய ஏமாற்று வேலை என்பதாலும், அதிமுக அரசு நவீன பசுமை வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
அதன்படி, அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும். 
வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

இருண்ட தமிழகம் ஒளி பெற..
* இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
    
சிறப்பு உணவுப் பூங்கா...

* விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற் பூங்காக்கள் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
* குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து விவசாய விளை பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கின்ற வகையில் நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும். 
* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

ஆடு, மாடுகள் இலவசம்...
* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும். 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்...
* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும். தரமான, இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.
* 10-12ஆம் வகுப்பு வரை வேறுபாடு இல்லாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.
* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு கூடுதல் நிதி...
* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்
* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும்.
* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும். 
* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்...
* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர். 
* தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும். அரசுப் பணியில் காலி இடங்கள் நிரப்பப்படும். புதிய வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். உணவு கட்டணம் மற்றும் உதவித் தொகைகள் கூட்டி வழங்கப்படும்.
இளைஞர்களுக்காக...
* படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, லாப நோக்கத்துடன் சுய தொழில் தொடங்க - அரசு பங்குத் தொகை தகுதிக்கேற்ப 25 லட்சம் ரூபாய் வரை அளித்து, வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படும்.
* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.

சுய உதவிக் குழு சிறப்புத் திட்டம்..
* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.  அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.

* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். 


ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் ஃப்ரீ...
* தாய்மார்களுக்கு ஒரு ஃபேன், ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

இலவச பஸ் பாஸ்...
* 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு...
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும். தரமான மருத்துவ வசதி செய்து தரப்படும்.  கல்வி பயில தேவையான உதவிகள், சிறப்பு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.
* அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும். 

நவீன நீர்வழிச் சாலை..
* தமிழக நதிகளை நீர்வழிச் சாலைகள் மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல், வெள்ளப் பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி மற்றும் தேக்கி, தேவையான பாசனப் பகுதிக்கு, தேவையான பொழுது பயன்படுத்துவோம். நவீன நீர்வழிச் சாலைக்கு உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.
* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
* அண்டை மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நல்லிணக்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும். 
* முல்லை பெரியாறு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழிக்காக...
* தமிழை இந்திய ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

* கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் தன்மையை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை சீரமைத்து, தமிழ் மொழி உலகம் எல்லாம் பரவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் மொழியை நீதிமன்றங்களில் நீதித் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்காக...
* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும்.
* அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக...
* மாற்றுத் திறனாளிகளுக்கென 3 சதவீத இட ஒதுக்கீடு அரசுப் பணியில் ஒதுக்கப்படும்.  அதை உடனடியாக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 

கேபிள் டிவி அரசுடமை... 
* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமையாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும்.  அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். டிடிஎச் சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை வாய்ப்பு...
* செயல்படாத கிராமப்புற பிபிஓ மையங்களின் இன்றைய வடிவத்தை மாற்றம் செய்து, மாவட்டம் தோறும், கிராமங்களில் 150 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.  இதன் மூலம் 15,000 இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1 லட்சம் கிராமபுற மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மோனோ ரயில் திட்டங்கள்..
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருமண உதவித் தொகை...
* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.
* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

சட்டம் ஒழுங்கு கண்டிப்பு... 
  * சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவு தாட்சண்யமும் இல்லாமல் நிலை நாட்டப்படும். 
* மக்கள் அமைதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 

* முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உர்த்தப்படும்.
திருப்பூர் சாயக் கழிவு..
* திருப்பூர் சாயக் கழிவு பிரச்னையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.

முதியோருக்கு கூடுதல் உதவித் தொகை...
* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். 
* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவைக்கு ஏற்றபடி அரசு விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்துவதோடு, அவைகளின் கூட்டமைப்புகள்,

பிற மொழி பயிற்சி... 
* பள்ளிகளில் தாய் மொழியோடு பிற இந்திய மொழிகள் மற்றும் அன்னிய மொழிகள் பயில விரும்புபவர்கள் விரும்புகின்ற வகையில் பயில சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலைகள் வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நுழைவுத் தேர்வு..
* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல்படுத்தப்பட மாட்டாது.

108 ஆம்புலன்ஸ்..
சில மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தமிழகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கையை கூட்டி, நடைமுறையில் உள்ள நிர்வாக குறைகளை களைந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.

பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்...
ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும். 
* ஊக வணிகம் தடுக்கப்பட்டு, பதுக்கல் ஒழிக்கப்படும்.
* கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், திமுக அமைச்சர்களாலும், அவர்களது கூலிப் படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும்.

கோடம்பாக்கத்தை மீட்க...
திரைப்படத் துறையில் உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். 
* நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

Monday, March 21, 2011

அ.தி.மு.க. புதிய வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை, மார்ச்.21,2011
அதிமுகவின் புதிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
அ.தி.மு.க.,வேட்பாளர்கள்புதியபட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி ‌கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. 
மொத்தம் 160 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வருமாறு:


1.ஸ்ரீரங்கம் (139) -  ஜெ ஜெயலலிதா

2.பொன்னேரி (தனி) (2) - பொன். ராஜா
3.திருவள்ளூர் (4)- ரமணா   
4.பூவிருந்தவல்லி (தனி) (5)- இரா. மணிமாறன்
5.ஆவடி (6)- எஸ். அப்துல் ரஹீம்
6.அம்பத்தூர் (8)- எஸ். வேதாச்சலம் 
7.மாதவரம் (9)- வி. மூர்த்தி 
8.திருவொற்றியூர் (10)- கே. குப்பன்
9.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11)- பி. வெற்றிவேல்
10.கொளத்தூர் (13)- சைதை சா. துரைசாமி
11.வில்லிவாக்கம் (14)-  பிரபாகர
12.திரு.வி.க. நகர் (தனி) (15)- வ. நீலகண்டன்
13.ராயபுரம் (17)- டி. ஜெயக்குமார் 
14.துறைமுகம் (18)- பழ. கருப்பையா
15.ஆயிரம்விளக்கு (20)-  பா. வளர்மதி
16.அண்ணாநகர் (21)-  எஸ். கோகுல இந்திரா
17.சைதாப்பேட்டை (23)- ஜி. செந்தமிழன்
18.தியாகராயநகர் (24)- வி.பி. கலைராஜன்
19.மயிலாப்பூர் (25)-  ஆர். ராஜலட்சுமி
20.வேளச்சேரி (26)- எம்.கே. அசோக்
21.சோழிங்கநல்லூர் (27)- கே.பி. கந்தன்
22.ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29)- மொளச்சூர் இரா. பெருமாள்
23.பல்லாவரம் (30)- ப. தன்சிங்
24.தாம்பரம் (31)- சின்னையா
25.திருப்போரூர் (33)- தண்டரை கே. மனோகரன்


26.செய்யூர் (தனி) (34)- வி.எஸ். ராஜி
27.மதுராந்தகம் (தனி) (35)-  எஸ். கணிதா சம்பத்
28.உத்திரமேரூர் (36)- வாலாஜாபாத் பா. கணேசன்
29.காஞ்சிபுரம் (37)- வி. சோமசுந்தரம்
30.அரக்கோணம் (தனி) (38)- சு. ரவி
31.காட்பாடி (40)- எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்
32.ராணிப்பேட்டை (41)- அ. முஹம்மத்ஜான்
33.ஆற்காடு (42)- ஆர். சீனிவாசன்
34.வேலூர் (43)- டாக்டர் வி.எஸ். விஜய்
35.வாணியம்பாடி (47)- கோவி. சம்பத்குமார்
36.ஜோலார்பேட்டை (49)- கே.சி. வீரமணி
37.திருப்பத்தூர் (50)- கே.ஜி. ரமேஷ்
38.ஊத்தங்கரை (தனி) (51)-  மனோரஞ்சிதம் நாகராஜ்
39.பர்கூர் (52)- கே.இ. கிருஷ்ணமூர்த்தி 
40.கிருஷ்ணகிரி (53)- கே.பி. முனுசாமி
41.பாலக்கோடு (57)- கே.பி. அன்பழகன்
42.பாப்பிரெட்டிப்பட்டி (60)- பி. பழனியப்பன்
43.திருவண்ணாமலை (63)- எஸ். இராமச்சந்திரன்
44.கீழ்பென்னாத்தூர் (64)- ஏ.கே. அரங்கநாதன்
45.கலசபாக்கம் (65)- கிருஷ்ணமூர்த்தி
46.போளூர் (66)-  எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன்
47.செய்யார் (68)- முக்கூர் என். சுப்பிரமணியன்
48.வந்தவாசி (தனி) (69)- செய்யாமூர் வே. குணசீலன்
49.மைலம் (71)- கே.பி. நாகராஜன்
50.திண்டிவனம் (தனி) (72)- டாக்டர் த. அரிதாஸ்


51.வானூர் (தனி) (73)- ஐ. ஜானகிராமன்
52.விழுப்புரம் (74)- சி.வி. சண்முகம்
53.உளுந்தூர்பேட்டை (77)- இரா. குமரகுரு
54.சங்கராபுரம் (79)- ப. மோகன்
55.கள்ளக்குறிச்சி (தனி) (80)-  பா. அழகுவேல் பாபு
56.ஆத்தூர் (தனி) (82)- எஸ். மாதேஸ்வரன்
57.ஏற்காடு (83) - செ. பெருமாள்
58.ஓமலூர் (84)- பல்பாக்கி சி. கிருஷ்ணன் 
59.எடப்பாடி (86)- எடப்பாடி கே. பழனிசாமி
60.சங்ககிரி (87)-  விஜயலட்சுமி பழனிச்சாமி 
61.சேலம் (மேற்கு) (88)- ஜி. வெங்கடாஜலம்
62.சேலம் (தெற்கு) (90)- எம்.கே. செல்வராஜ்
63.வீரபாண்டி (91)- எஸ்.கே. செல்வம்
64.ராசிபுரம் (தனி) (92)- ப. தனபால்
65.நாமக்கல் (94)- கே.பி.பி. பாஸ்கர்
66.குமாரபாளையம் (97)- பி. தங்கமணி
67.ஈரோடு (மேற்கு) (99)- கே.வி. ராமலிங்கம்
68.மொடக்குறிச்சி (100)- ஆர்.என். கிட்டுசாமி
69.தாராபுரம் (தனி) (101)- கே. பொன்னுசாமி
70.காங்கேயம் (102)- என்.எஸ்.என். நடராஜ்
71.பெருந்துறை (103)- தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
72.பவானி (104)- பி.ஜி. நாராயணன்
73.அந்தியூர் (105)- எஸ்.எஸ். ரமணீதரன்
74.கோபிசெட்டிப்பாளையம் (106)- கே.ஏ. செங்கோட்டையன்
75.உதகமண்டலம் (108)- புத்தி சந்திரன்


76.மேட்டுப்பாளையம் (111)- ஓ.கே. சின்னராஜ்
77.அவினாசி (தனி) (112)- ஏ.ஏ. கருப்புசாமி
78.திருப்பூர் (வடக்கு) (113)- எம்.எஸ்.எம். ஆனந்தன்
79.பல்லடம் (115)- பல்லடம் கே.பி. பரமசிவம்
80.கவுண்டம்பாளையம் (117)- வி.சி. ஆறுக்குட்டி
81.கோயம்புத்தூர் (வடக்கு) (118)- தா. மலரவன்
82.தொண்டாமுத்தூர் (119)- எஸ்.பி. வேலுமணி
83.கோயம்புத்தூர் (தெற்கு) (120)- சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,
84.சிங்காநல்லூர் (121)- ஆர். சின்னசாமி
85.கிணத்துக்கடவு (122)- செ. தாமோதரன்
86.பொள்ளாச்சி (123)- எம்.கே. முத்துகருப்பண்ணசாமி
87.உடுமலைப்பேட்டை (125)- பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்
88.மடத்துக்குளம் (126)- சி. சண்முகவேலு
89.பழனி (127)- கே.எஸ்.என். வேணுகோபாலு
90.ஒட்டன்சத்திரம் (128)- பி. பாலசுப்பிரமணி
91.நத்தம் (131)- இரா. விசுவநாதன்
92.வேடசந்தூர் (133)- ச. பழனிச்சாமி
93.அரவக்குறிச்சி (134)- வி. செந்தில்நாதன்
94.கரூர் (135)- வி. செந்தில்பாலாஜி
95.கிருஷ்ணராயபுரம் (தனி) (136)- எஸ். காமராஜ்,
96.குளித்தலை (137)- ஹ. பாப்பாசுந்தரம்
97.மணப்பாறை (138)- ஆர். சந்திரசேகர்
98.திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140)- என். மரியம்பிச்சை
99.திருச்சிராப்பள்ளி கிழக்கு (141)- ஆர். மனோகரன்
100.மணச்சநல்லூர் (144)- பூனாட்சி


101.முசிறி (145)- என்.ஆர். சிவபதி
102.துறையூர் (தனி) (146)-  இந்திராகாந்தி 
103.பெரம்பலூர் (தனி) (147)- இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
104.அரியலூர் (149)- துரை. மணிவேல்
105.ஜெயங்கொண்டம் (150)- பா. இளவழகன்
106.நெய்வேலி (153)- எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
107.கடலூர் (155)- எம்.சி. சம்பத்,
108.குறிஞ்சிப்பாடி (156)- சொரத்தூர் இரா. இராஜேந்திரன்
109.புவனகிரி (157)-  செல்வி ராமஜெயம்
110.காட்டுமன்னார் கோயில் (தனி) (159)- என். முருகுமாறன்
111.சீர்காழி (தனி) (160)-  ம. சக்தி
112.பூம்புகார் (162)- எஸ். பவுன்ராஜ்
113.நாகப்பட்டினம் (163)- கே.ஏ. ஜெயபால்
114.வேதாரண்யம் (165)- என்.வி. காமராஜ்
115.மன்னார்குடி (167)- சிவா. ராஜமாணிக்கம்
116.திருவாரூர் (168)- குடவாசல் எம். இராசேந்திரன்
117.நன்னிலம் (169)- ஆர். காமராஜ்
118.திருவிடைமருதூர் (தனி) (170)- பாண்டியராஜன்
119.கும்பகோணம் (171)- இராம. இராமநாதன்
120.பாபநாசம் (172)- இரா. துரைக்கண்ணு
121.திருவையாறு (173)- எம். ரெத்தினசாமி
122.தஞ்சாவூர் (174)- எம். ரெங்கசாமி
123.ஒரத்தநாடு (175)- ஆர். வைத்திலிங்கம்
124.கந்தர்வகோட்டை (தனி) (178)- ந. சுப்ரமணியன்
125.விராலிமலை (179)- டாக்டர் சி. விஜயபாஸ்கர்


126.திருமயம் (181)- பி.கே. வைரமுத்து 
127.ஆலங்குடி (182)- கு.ப. கிருஷ்ணன்
128.அறந்தாங்கி (183)- மு. ராஜநாயகம்
129.காரைக்குடி (184)- சோழன் சித. பழனிச்சாமி
130.திருப்பத்தூர் (185)- ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்  
131.மானாமதுரை (தனி) (187)- ம. குணசேகரன்
132.மேலூர் (188)- ஆர். சாமி 
133.மதுரை கிழக்கு (189)- கே. தமிழரசன்
134.சோழவந்தான் (தனி) (190)- எம்.வி. கருப்பையா
135.மதுரை வடக்கு (191)- ஏ.கே. போஸ்
136.மதுரை மேற்கு (194)- செல்லூர் கே. ராஜூ
137.திருமங்கலம் (196)- ம. முத்துராமலிங்கம்
138.ஆண்டிபட்டி (198)- தங்க தமிழ்செல்வன்
139.போடிநாயக்கனூர் (200)- ஓ. பன்னீர்செல்வம்
140.ராஜபாளையம் (202)- கே. கோபால்சாமி
141.சாத்தூர் (204)- உதயகுமார்
142.சிவகாசி (205)- மு.கூ. ராஜேந்திர பாலாஜி
143.அருப்புக்கோட்டை (207)- வைகைச்செல்வன்
144.பரமக்குடி (தனி) (209)- டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்
145.முதுகுளத்தூர் (212)- மு. முருகன்
146.விளாத்திகுளம் (213)- ஜி.வி. மார்க்கண்டேயன்
147.தூத்துக்குடி (214)- ஏ. பால்
148.திருச்செந்தூர் (215)- பி.ஆர். மனோகரன்,
149.ஸ்ரீவைகுண்டம் (216)- எஸ்.பி. சண்முகநாதன்
150.கோவில்பட்டி (218)- கடம்பூர் செ. ராஜு


151.சங்கரன்கோவில் (தனி) (219)- சொ. கருப்பசாமி
152.வாசுதேவநல்லூர் (தனி) (220)- டாக்டர் எஸ். துரையப்பா

153.கடையநல்லூர் (221)- பி. செந்தூர்பாண்டியன்
154.ஆலங்குளம் (223)- பி.ஜி. ராஜேந்திரன்
155.திருநெல்வேலி (224)- நயினார் நாகேந்திரன்
156.அம்பாசமுத்திரம் (225)- இசக்கி சுப்பையா
157.கன்னியாகுமரி (229)- பச்சைமால்
158.நாகர்கோவில் (230)- நாஞ்சில் ஏ. முருகேசன்
159.குளச்சல் (231)- பி. லாரன்ஸ்
160.கிள்ளியூர் (234)- ஆர். ஜார்ஜ்

Thursday, March 17, 2011


அடுத்த மாதம் 13ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.. அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை புரட்சித்தலைவி ஜெயலலிதா  வெளியிட்டார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன் முறையாக புரட்சித்தலைவி ஜெயலலிதா போட்டியிடுகிறார்.


அ.தி.மு.க., போட்டியிடும் 160 தொகுதிகள் விபரம் :

1.ஸ்ரீரங்கம் -புரட்சித்தலைவி ஜெயலலிதா
2.கும்மிடிபூண்டி - வி.கோபால்நாயுடு
3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா
4.திருவள்ளூர் - பி.வி. ரமணா
5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்
6.ஆவடி - அப்துல் ரகீம்
7.அம்பத்தூர் - வேதாசலம்
8.மாதவரம் - வி.மூர்த்தி
9.திருவொற்றியூர் -கே.குப்பன்
10.ஆர்.கே.நகர் - வி.மதுசூதனன்
11.பெரம்பூர் - பி.வெற்றிவேல்
12.வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகரன்
13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்
14.ராயபுரம் - டி.ஜெயக்குமார்
15. துறைமுகம் - பழ.கருப்பையா
16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி
17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா
18.விருகம்பாக்கம் - ஆர்.கமலகண்ணன்
19.சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன்
20.தி.நகர் - வி.பி.கலைராஜன்
21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி
22.வேளச்சேரி - எம்.கே.அசோக்
23.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
24.ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன்
25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்
26. பல்லாவரம் - ப.தன்சிங்
27. தாம்பரம் - டி.கே.சின்னையா
28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்
29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி
31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்
35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்
36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்
37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி
38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்
43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்
45. மயிலம் - கே.பி.நாகராஜன்
46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்
47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு
49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு
50. சங்கராபுரம் -பா. மோகன்
 

51. கள்ளகுறிச்சி(தனி) - அழகுவேல் பாபு
52. ஏற்காடு(எஸ்டி) - செ.பெருமாள்
53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்
54. எடப்பாடி - கே.பழனிசாமி
55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்
56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்
58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
59. ராசிபுரம்(தனி) - பா.தனபால்
60. குமாரபாளையம் - பி.தங்கமணி
61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்
62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்
63.மொடக்குறிச்சி - ஆர்.என்.கிட்டுசாமி
64.தாராபுரம்(தனி) - கே. பொன்னுசாமி
65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்
66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்
67.பவானி - எம்.ஆர்.துரை
68.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணிதரன்
69.கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
70.ஊட்டி - புத்தி சந்திரன்
71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்
72.அவினாசி(தனி) - ஏ.ஏ.கருப்புசாமி
73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்
74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி
75. பல்லடம் - கே.பி.பரமசிவம்
76. சூலூர் - செ.ம.வேலுசாமி
77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி
78. கோவை வடக்கு - தா.மலரவன்
79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி
81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி
82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்
85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு
87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி
88. நத்தம் - ரா.விசுவநாதன்
89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்
90.வேடசந்தூர் - சா. பழனிசாமி
91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
92. கரூர் - வி.செந்தில் பாலாஜி
93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்
94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை
97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்
99. முசிறி - என்.ஆர்.சிவபதி
100 பெரம்பலூர்(தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்
 

101 .கடலூர் - எம்.சி.சம்பத்
102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்
103. சீர்காழி(தனி) - திருமதி மா. சக்தி
104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்
107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்
108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்
110. நன்னிலம் - ஆர்.காமராஜ்
111. கும்பகோணம் - ராம.ராமநாதன்
112. பாபநாசம் - ரா. துரைகண்ணு
113. திருவையாறு - எம்.ரங்கசாமி
114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
115. கந்தர்வக்கோட்டை(தனி) - நா.சுப்ரமணியன்
116. விராலிமலை - வி.சி.ராமையா
117. புதுக்கோட்டை - டி.கருப்பையா
118. திருமயம் - பி.கே.வைரமுத்து
119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்
120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்
122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்
123. மானாமதுரை(தனி) - ம.குணசேகரன்
124. சோழவந்தான்(தனி) - எம்.வி.கருப்பையா
125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ
126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா
127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து
128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்
129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா.நீதிபதி
 

131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
132. பெரியகுளம்(தனி) - கே. இளமுருகன்
133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
134. கம்பம் - கே.சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - கே.சீனிவாசன்
137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்
138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி
140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்
141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்
142. முதுகுளத்தூர் - மு.முருகன்
143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்
144. தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன்
145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
147. ஒட்டபிடாரம்(தனி) - என்.சின்னதுரை
148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ
149. சங்கரன்கோவில்(தனி) - சோ.கருப்புசாமி
150. வாசுதேவநல்லூர்(தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
152. தென்காசி - கே.அண்ணாமலை
153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா
158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி.லாரன்ஸ்