Thursday, October 21, 2010

ஆயிரம் அ.தி.மு.க., வந்தாலும் கருணாநிதி

 

ஒரு அ.தி.மு.க., அல்ல; ஆயிரம் அ.தி.மு.க., வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது. இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும்,  நமது வெற்றிக்கு தடை போட அ.தி.மு.க., பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதற்கு இடம் தரக் கூடாது. என மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடனான கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார்.

இந்த கிறுக்குத்தனமான பேச்சை கேட்டு.எம்ஜிஆர் என்கிற மக்கள் சக்தியின் பலம் புரியாமல் இவர் உளறுவதை பார்த்தால் மதுரையில் கூடிய அ.தி.மு.க,பொதுக்கூட்டத்தின் "தாக்கம்" அவரை படாத பாடு படுத்திவிட்டது என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. 1973 ல் "திண்டுக்கல்லில்" அதிமுக பிறந்த குழந்தையாய் "உதைத்த" உதையால் கருணாநிதி, கடந்த "பதினான்கு" ஆண்டுகளாய் மக்களிடம் கெஞ்சோ கெஞ்சு என்று "கெஞ்சியது"  "அழுதது"  "புலம்பியது"  "காலிலே விழுகின்றேன்" என்றது, "செருப்பாய் இருப்பேன்"என்றது,  மக்களுக்கு "துடுப்பாய்" இருப்பேன்.என்றதும், 

.எம்ஜிஆர், வரும்வரை "என்னிடம்" ஆட்சி பொறுப்பை கொடுங்கள் மக்களே.என்றதும் எம்ஜிஆர் வந்ததும் அதனை "திருப்பி" கொடுத்துவிடுகின்றேன் என்று மு.க சொன்னதும் அவ்வாறு நடக்காமல் போனதும் இறுதியில் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்கிற கதையாய் "மக்களா"இவர்கள் "சோற்றால்அடித்தபிண்டங்கள் என்று மக்கள் மீது "வசவு கணை வீசிய"  கதையெல்லாம் ஒரே ஒரு "அதிமுக" வை தாக்கு பிடிக்காமல் இவர் (மு.க) புலம்பியவை. ஒரே ஒரு அதிமுக,விற்கே தாக்கு பிடிக்க முடியாமல் "பதினான்கு" ஆண்டுகள் "வனவாசம்".என்று தூங்கியது அதன் பிறகு   2006 ல் கருணாநிதி மைனாரிடியாய் காங்.தயவுடன் பதவிக்கு வந்ததே பெரும்பாடாய் போனது.

ஆனால் இப்போது வருகின்ற "வாய்ச்சவடாலை" பாருங்கள்!! ஒரு அதிமுகவிற்கே பதில் சொல்ல முடியாமல் கருணாநிதி   உளறுவதை பார்த்தால் "வயதான" காலத்தில் "இதெல்லாம் சகஜமப்பா" என்றுதான் தோன்றுகின்றது. பாவம் கடைசி பதவி..அந்த ஏக்கம் வெறுப்பு கோபம் அதன் எதிரொலிதான் இந்த "வீர"வசனம்.!

பொதுமக்கள் மட்டும் தங்களது மனசாட்சிப்படி ஓட்டு போட்டால் போதும்., ஒரே ஒரு அ தி மு க கூட தேவையில்லை  தி மு க அரசை தோற்கடிக்க,  பொதுமக்களேபோதும். முடிவை நான் இங்கே தெரிவிக்க வேண்டியது இல்லை..

ஓர் அ தி மு க வை வெல்வதற்கே இவருக்கு ஏழு கட்சி கூட்டணி தேவை பட்டது.ஆயிரம் அ .தி.மு.க,வை வெல்வதற்கு இவருக்கு ஏழாயிரம் கட்சி கூட்டணி தேவை. அவ்வளவு கட்சிகள் தமிழ் நாட்டில் இல்லையே.ஒரு அதிமுகவையே உங்களால் சமாளிக்க ,    பதில் சொல்ல, முடியலை.  

 இந்தநிலையில் எப்படி ஆயிரம் அதிமுகவை சமாளிக்கமுடியும்?. ஒருவனுக்கு எழுந்திரிச்சி நிக்கவே வழி இல்லையாம்.அவனுக்கு ஆயிரம் பொண்டாட்டி கேட்குதாம் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது

No comments:

Post a Comment