Friday, February 4, 2011

கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?புரட்சித்தலைவிபேட்டி.


ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி   கூறியதாவது:
 

ராசா மீதான கைது நடவடிக்கை பல புதிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. கருணாநிதி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த நடவடிக்கை மிகவும் தாமதமான, மிகவும் சாதாரணமான ஒரு நடவடிக்கை.
 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நீராராடியா, கருணாநிதி குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் வெளியாயின. ஊழலில் ஆதாயமடைந்த கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகஇருக்கிறோம். மத்திய அரசின் நடவடிக்கைகளில் பெருமளவில் முரண்பாடுகள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ரூ. 1,76,000 கோடி இழப்பு என சி.ஏ.ஜி. கூறியுள்ளார்.
 

அமைச்சர் கபில்சிபல், அரசுக்கு இழப்பே ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது ராசாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கபில்சிபல் தெரிவித்தது போல், ராசா தவறு செய்யவில்லை என்றால் அவர் கைது செய்யப்பட்டது ஏன்?
 

ராசாத்தி, கனிமொழி ஆகியோருடன் நீராராடியாவின் தொலைபேசி உரையாடல் கருணாநிதி குடும்பத்தினரின் தொடர்புகளை தெளிவாக்குகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கருணாநிதி குடும்பத்தினரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ராசா கைது நடவடிக்கையுடன் இப்பிரச்சினை முடிந்துவிடவில்லை. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும். தற்போதைய சூழ்நிலையில், ராசா கைது செய்யப்பட்டிருப்பது செயற்கையாகவும், சந்தேகத்திற்கு இடம் அளிப்பதாகவும் உள்ளது. 3 ஆண்டுகளாக ராசாவை ஏன் கைது செய்யவில்லை? ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானதும், 3 ஆண்டுகளுக்கு முன்பே அல்லது 2 ஆண்டுகளுக்கு முன்பே ராசாவை ஏன் கைது செய்யவில்லை? உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகாவது கைது செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை,


தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு செயற்கையாக நடத்தப்பட்டுள்ள அரசியல் நாடகம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் ஆதாயம் அடைந்த கருணாநிதி குடும்பத்தினரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

No comments:

Post a Comment