Saturday, May 14, 2011

அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி


அ இ அ தி மு க.பொதுசெயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் மிகச் சரியாக இருக்கும்.

இந்த தேர்தலில் தமிழனின் தன்மானம் காப்பாற்ற பட்டருக்கிறது. தலை குனிந்திருந்த தமிழக தமிழன் தலை நிமிர்ந்து விட்டான். 

அப்படியே உலக தமிழனும் தலை நிமிர நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.தமிழக தமிழன் மட்டும் தமிழன் அல்ல,உலகில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர்கள்தான். 

நாளை உலகை ஆள வேண்டும் தமிழர்களே என்ற எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறும்.

 அதிமுக கூட்டணி, இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் 31 தொகுதிகளை , திமுக கூட்டணிக்கு தர்மம் செய்து விட்டு, 203 தொகுதிகளை அள்ளும் என்று  நினைத்து பார்த்திருக்க முடியாது.

புரட்சி தலைவிக்கு, இது கோஹினூர் வைரம் பொறித்த மணிமகுடம். மீண்டும் ஒரு பிரெஞ்சு புரட்சி வந்து விட்டதோ, என எண்ணும் வண்ணம் ஒரு யுக புரட்சி நடந்திருக்கிறது. 
 
தமிழன் மீண்டும் உலகிற்கு தான் எப்படிபட்டவன் என்பதை உணர்த்தி இருக்கிறான் ,தமிழக அம்பானிகளாக வலம் வந்த ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்து இருக்கிறார்கள்.
 
பணத்திற்கும்,இலவசத்திற்கும் தமிழன் ஒரு பலிகடா என்று நினைத்த அரசியல்வாதிகளுக்கு இது ஒரு மரண அடி... 

உலகம் முழுவதும் இன்று தமிழன் தலை நிமிர்ந்து கம்பிரமாக மிடுக்குடன் நிற்கிறான்.

பணத்தையும், இலவசங்களையும் அள்ளி இறைத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி செய்த துரோகங்களுக்கும், அநியாயங்களுக்கும், மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்... 

இவர் செய்த பாவங்களின் பலனை இனிவரும்காலங்களில் அனுபவிப்பார்... ஈழத்தில் தமிழர்களை  கொன்று குவிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்த கருணாநிதி அதற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.


பணத்தின் மூலம் ஜெயித்து விடலாம் என்ற தி.மு.க. வின் நினைப்பை முளையிலேயே கிள்ளி எறிந்த தமிழ் மக்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.

இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் அகில இந்தியாவுக்கே பாடம் கற்பித்திருக்கிறார்கள்.இதற்கு காரணமான மக்களின் அறிவாற்றலை, என்ன சொல்லி பாராட்டுவது.



No comments:

Post a Comment